'ஜாலியோ ஜிம்கானா' பாடலுக்கு தாய்லாந்து பீச்சில் ஆட்டம் போட்ட தமிழ் நடிகை!

'ஜாலியோ ஜிம்கானா' பாடலுக்கு தாய்லாந்து பீச்சில் ஆட்டம் போட்ட தமிழ் நடிகை!

விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற ’ஜாலியோ ஜிம்கானா’ பாடலுக்கு தமிழ் நடிகை ஒருவர் ஆட்டம் போட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் நாளை உலகெங்கும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க கோடிக்கணக்கான ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற ‘அரபுக்குத்து’ மற்றும் ’ஜாலியோ ஜிம்கானா’ ஆகிய பாடல்கள் உலகம் முழுவதும் சூப்பர்ஹிட்டானது என்பதும், இந்த பாடல்களுக்கு திரையுலக பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் பலரும் நடனமாடிய வீடியோ இணையதளங்களில் வைரலானது என்பது தெரிந்ததே.

இந்நிலையில் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை ஜனனி ஐயர் ’ஜாலியோ ஜிம்கானா’ பாடலுக்கு செம ஆட்டம் போட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News