பிக்பாஸ் டைட்டில் வின்னர் பாலாஜிக்கு கிடைத்தது இத்தனை லட்சமா?

பிக்பாஸ் டைட்டில் வின்னர் பாலாஜிக்கு கிடைத்தது இத்தனை லட்சமா?

கடந்த ஞாயிறன்று நடந்த பிக்பாஸ் அல்டிமேட் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் பாலாஜி முருகதாஸ் டைட்டில் வின்னர் ஆக அறிவிக்கப்பட்டார் என்பதும், நிரூப் இரண்டாவது இடத்தையும், ரம்யா பாண்டியன் மூன்றாவது இடத்தையும், தாமரை நான்காவது இடத்தையும் பிடித்தார் என்றும் தெரிந்தது .

இந்த நிலையில் டைட்டில் வின்னர் ஆன பாலாஜி முருகதாஸுக்கு கிடைத்த பரிசு மற்றும் சம்பளத் தொகை குறித்த தகவல் தற்போது வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலாஜி முருகதாஸ் பிக்பாஸ் வீட்டில் 70 நாட்கள் இருந்து உள்ளார். அவருக்கு நாளொன்றுக்கு 25 ஆயிரம் சம்பளம் என்ற வகையில் மொத்த சம்பளம் 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கான பரிசு ரூ 35 லட்சம் சேர்த்து அவருக்கு மொத்தம் 52 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் அல்டிமேட் டைட்டில் வின்னருக்கான பரிசு ரூ.50 லட்சம் என்ற போதிலும் ஸ்ருதிக்கு ரூ.15 லட்சம் கொடுக்கப்பட்டதால் பாலாஜிக்கு ரூ.35 லட்சம் மட்டுமே கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இரண்டாவது இடத்தைப் பிடித்த நிரூபுக்கு சம்பளம் மட்டும் 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என்றும் ரம்யா பாண்டியனுக்கு வாரம் இரண்டு லட்ச ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும், தாமரைக்கு வாரத்திற்கு 80 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் டைட்டில் பட்டத்தை நூலிழையில் தவறவிட்ட பாலாஜி முருகதாசுக்கு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் டைட்டில் பட்டம் கிடைத்தது மட்டுமின்றி 50 லட்சத்துக்கும் மேலாக வருமானம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES