மீண்டும் இணையும் ஜெயம் ரவி - நயன்தாரா ஜோடி: இயக்குனர் யார் தெரியுமா?

மீண்டும் இணையும் ஜெயம் ரவி - நயன்தாரா ஜோடி: இயக்குனர் யார் தெரியுமா?

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவியுடன் நயன்தாரா இணைந்து நடித்த நிலையில் தற்போது மீண்டும் ஜெயம் ரவியுடன் இணைந்து அவர் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

’வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன் ஆகிய திரைப்படங்களின் இயக்குனர் அகமது. இவர் இயக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்க உள்ளதாகவும், இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்திற்கு ’இறைவன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது .

நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா மீண்டும் ஒரு படத்தில் இணைய இருப்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News