'தலைவர் 169' படம் தாமதமாகிறதா? நெல்சன் விளக்கம்!

'தலைவர் 169' படம் தாமதமாகிறதா? நெல்சன் விளக்கம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’தலைவர் 169’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மே அல்லது ஜூன் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் ,அனிருத் இசையில் உருவாகயிருக்கும் திரைப்படம் ’தலைவர் 169’. இந்த படம் குறித்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியான நிலையில் மே அல்லது ஜூன் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் அதிகம் இருப்பதாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அமெரிக்கா செல்ல இருப்பதாலும், இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதத்திற்குப் பின்னரே தொடங்கும் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் நெல்சன் கூறியுள்ளார். இதனை அடுத்து ’தலைவர் 169’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் பிரியங்கா மோகன் ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், படப்பிடிப்பு தொடங்கும் முன் இந்த படத்தில் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News