உச்சகட்ட கிளாமரில் சன்னியோன்: விஜய்சேதுபதி வெளியிட்ட போஸ்டர்!

உச்சகட்ட கிளாமரில் சன்னியோன்: விஜய்சேதுபதி வெளியிட்ட போஸ்டர்!

சன்னி லியோன் நடித்து வரும் தமிழ் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெங்கட்பிரபு மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் வெளியிட உள்ளனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் விஜய் சேதுபதி மற்றும் வெங்கட் பிரபு ஆகிய இருவரும் சற்று முன் தங்களது சமூக வலைத்தளத்தில் சன்னி லியோன் நடித்த ’ஓ மை கோஸ்ட்’ என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

உச்சகட்ட கிளாமரில் சன்னிலியோன் இருக்கும் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா நாயகன், நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் சன்னி லியோன் கதையின் நாயகியாக முக்கிய கேரக்டரில் நடித்து வருவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

யுவன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜாவித் ரியாஸ் இசையமைத்துள்ளார் என்பதும் தீபக் மேனன் ஒளிப்பதிவில் அருண் சித்தார்த் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் இந்த படம் ரிலீசாக உள்ளது.

LATEST News

Trending News