பொய் சொன்னதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன்: நடிகை மனிஷா யாதவ் வீடியோ வைரல்!

பொய் சொன்னதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன்: நடிகை மனிஷா யாதவ் வீடியோ வைரல்!

நடிகை மனிஷா யாதவ் நான் பிஸியாக இருந்ததாக பொய் கூறினேன் என்றும் ஆனால் அதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் யோகா செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

‘வழக்கு எண் 18/9’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மனீஷா யாதவ். அதன் பின்னர் அவர் ஆதலினால் காதல் செய்வீர். ஜன்னல் ஓரம். திரிஷா இல்லைனா நயன்தாரா. ஒரு குப்பை கதை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் மனிஷா யாதவ் அவ்வப்போது வெளியிடும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வரும் என்பதும் தெரிந்ததே. .

இந்த நிலையில் சற்று முன்னர் மனிஷா யாதவ் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நான் பிசியாக இருக்கின்றேன் என்று பொய் கூறினேன், ஏனென்றால் நான் அவர்கள் நினைத்த வேலையை செய்யவில்லை. என்னுடைய மனதை சரி செய்யவும், என்னுடைய மனதை ஒருமுகப்படுத்தவும் முயற்சி செய்து வந்தேன். இந்த பொய்யை கூறியதற்காக நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று பதிவு செய்து யோகா செய்யும் வீடியோவையும் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES