39 வயதிலும் வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் அஜித் பட நாயகி!

39 வயதிலும் வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் அஜித் பட நாயகி!

அஜித் படத்தில் நாயகியாக நடித்த நடிகை ஒருவர் 39 வயதிலும் வேற லெவல் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான ’வரலாறு’ உள்பட ஒரு சில தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை கனிகா. இவர் கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் செய்த பின்னர் நடிப்பதை குறைத்துக் கொண்டார் என்பதும் இருப்பினும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராமில் 7 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்களை கொண்டுள்ள நடிகை கனிகா பதிவு செய்யும் வீடியோக்கள் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புத்தாண்டு தினத்தில் நடிகை கனிகா வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். கனிகாவுக்கு தற்போது 39 வயது என்ற நிலையில் இந்த வயதிலும் அவர் சவாலான சில வொர்க்-அவுட்களை செய்யும் வீடியோ காட்சிகளை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES