'குக் வித் கோமாளி 3': குக்குகள், கோமாளிகளாக கலந்து கொள்பவர்கள் இவர்களா?

'குக் வித் கோமாளி 3': குக்குகள், கோமாளிகளாக கலந்து கொள்பவர்கள் இவர்களா?

’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மிகப்பெரிய பிரபலமானது என்பதும் இந்த சீசனில் கலந்துகொண்ட அஸ்வின், பவித்ரா, தர்ஷா, புகழ், சிவாங்கி உள்பட ஒருசிலர் திரையுலகிலும் தற்போது பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் அந்த அளவுக்கு இந்த நிகழ்ச்சியில் வெற்றி அதில் கலந்து கொண்டவர்களை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ வெளியானது என்பதும் அதில் ஷிவாங்கி, மணிமேகலை, சுனிதா மற்றும் பாலா ஆகியோர் கோமாளிகளாக கலந்துகொள்ள இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் முதல் இரண்டு சீசன்களில் நடுவர்களாக இருந்த தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாக இருக்க போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மூன்றாவது சீசனில் கலந்து கொள்ள இருக்கும் குக்குகள் யார் யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. நாட்டுப்புற இசைக் கலைஞரும், பிரபல பின்னணிப் பாடகருமான அந்தோணிதாசன், நடிகர் கருணாஸ் மனைவி கிரேஸ் கருணாஸ், நடிகரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான மனோபாலா, சார்பாட்டா பரம்பரை உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த சந்தோஷ் பிரதாப் மற்றும் நகைச்சுவை நடிகை வித்யுலேகா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் குக்குகளாக கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான குரேஷி, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி டைட்டில் பட்டத்தை வென்ற மூக்குத்தி முருகன், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பரத் ஆகியோர் 3வது சீசனின் கோமாளிகளாக கலந்து கொள்ள இருப்பதாகவும் அது மட்டுமின்றி மதுரை முத்து மற்றும் மற்றும் புகழ் ஆகியோர்களும் அவ்வப்போது இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

LATEST News

Trending News

HOT GALLERIES