"தாமரைன்னா கொஞ்சம் பயம்!".. ரஜினி வாய்ஸில் மிமிக்ரி.. ஸ்பெஷல் எஃபெக்ட் என பட்டையை கிளப்பிய ராஜூ!

"தாமரைன்னா கொஞ்சம் பயம்!".. ரஜினி வாய்ஸில் மிமிக்ரி.. ஸ்பெஷல் எஃபெக்ட் என பட்டையை கிளப்பிய ராஜூ!

பிக்பாஸ் வீட்டுக்குள் பிக்பாஸ் போட்டியாளர்கள் சிலருடன் உட்கார்ந்து கலகலவென மிமிக்ரி, பேச்சு என ராஜூ பேசி அசத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.

 

ஆம், பிக்பாஸ் வீட்டில் ஓய்வு நேரத்தில் பேசுவதை விட ஜாலி என்ன இருக்க போகிறது? இதை உண்மையாக்கும் வகையில் ஜாலியாக பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தார் ராஜூ.  பேச்சு மட்டுமின்றி அவருடைய பெர்ஃபார்மன்ஸ் ஆடியன்ஸையும் கட்டிப்போடும் அளவுக்கு நடந்து கொண்டிருந்தது.

இதில் சின்னப்பொண்ணு, ஐக்கி பெர்ரி, தாமரை, இமான் அண்ணாச்சி, அக்ஷரா, சிபி ஆகியோருக்கு மத்தியில் உட்கார்ந்து ராஜூ பல குரல்களில் பேசி காட்டினார். குறிப்பாக இயக்குனர் மற்றும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நடிகர் எம்.ஆர்.ராதா குரல்களில் பேசிய ராஜு முன்னதாக கார், பைக், ஆட்டோ, பஸ் ஆகியவற்றின் சப்தங்களை தத்ரூபமாக செய்து காட்டினார்.

கடைசியாக ரஜினி போல் பேசிய ராஜூ, ஒவ்வொருவரையும் வரவேற்று பேசினார். அதில் சின்னப்பொண்ணுவின் பாடல் குறித்து ரஜினி ஸ்டைலில் பேசிய ராஜூ, அதே ரஜினி ஸ்டைலில் தாமரையைப் பார்த்து, “தாமரை.. தாமரைன்னா எனக்கு கொஞ்சம் பயம்!.. ஆனால் இந்த தாமரை நல்ல தாமரை!” என்று பேசினார். இதற்கு அங்கிருந்தவர்கள் ஆச்சர்யமாகி வெடித்து சிரிக்கத் தொடங்கிவிட்டனர்.

 

இதேபோல் ஐக்கி பெர்ரியை பற்றி பேசி ராஜூ, “பிளாக்பெர்ரி தெரியும், ஸ்ட்ராபெர்ரி தெரியும். இது என்ன ஐக்கி பெர்ரி?” கலாய்த்தபடி அதே ரஜினி ஸ்டைலில் பட்டையைக் கிளப்பினார்.

ஏற்கனவே பிக் பாஸ் வீட்டுக்குள் ஒரு நாள் காலை ரஜினிபாடல் போட்டு எழுப்பினர். வந்தேண்டா பால்காரன் என்கிற அந்த பாடலில் ராஜூ மற்றும் பிரியங்கா இருவரும் ரஜினிகாந்த் மாதிரி நடனம் ஆடி அசத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES