அபிஷேக்கும் இல்லை, சின்னப்பொண்ணும் இல்லை, இந்த வார எலிமினேட் இவர்தான்!

அபிஷேக்கும் இல்லை, சின்னப்பொண்ணும் இல்லை, இந்த வார எலிமினேட் இவர்தான்!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் ஒருவரை எலிமினேட் செய்வதற்காக 15 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டு இருந்தனர் என்பதும் தலைவி தாமரைச்செல்வி மற்றும் பாவனி ரெட்டி தவிர அனைவரும் எலிமினேஷன் பட்டியலில் இருந்தனர் என்பதும் ஏற்கனவே தெரிந்ததே.

இந்த நிலையில் நாமினேஷன் செய்யப்பட்ட 15 பேர்களில் 4 பேர்கள் மிக குறைந்த வாக்குகள் பெற்று இருப்பதால் அவர்கள் நால்வரில் ஒருவர் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. அபிஷேக், சின்ன பொண்ணு, அபினய் மற்றும் நதியா சிங் ஆகிய நால்வரும் ஏறக்குறைய சிறிய வித்தியாசத்தில் குறைந்த வாக்குகள் பெற்று இருப்பதாகவும் இவர்களில் ஒருவர் நாளை வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் கசிந்தன.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி பிக்பாஸ் வீட்டில் இருந்து நதியா சிங் எலிமினேட் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பிக்பாஸ் ரசிகர்கள் அனைவரும் அபிஷேக் அல்லது சின்னப்பொண்ணு ஆகிய இருவரில் ஒருவர் தான் வெளியேறுவார்கள் என்று கருதியிருந்த நிலையில் திடீர் திருப்பமாக மலேசிய மாடல் நதியாசிங் எலிமினேட் செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES