”அந்த விடியோவை தர சம்மதம்” – ஜோதிகா – தோனி நடந்தது என்ன? (வீடியோ)
சூர்யா சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ள ஜெய் பீம் படத்தின் டீசர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ஞானவேல் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் நடிகர் சூர்யா ஐபிஎல் இறுதிப்போட்டியின் போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ரசிகர்களின் அன்பை எப்படித் திருப்பிக் கொடுப்பது என்று நான் தவித்திருக்கிறேன். ஆனால் அதனைத் தோனி தவறவிட்டதில்லை.
😍Captain Cool பற்றி @Suriya_offl பகிர்ந்த Cool ஆன வார்த்தைகள்👌
— Star Sports Tamil (@StarSportsTamil) October 15, 2021
😎 #JaiBhim Teaser உடன் #ByjusCricketLive இல் வருகிறார் 🎬
📺Stay Tuned #StarSportsTamil |⏰இன்று 6 PM pic.twitter.com/JC6r6vyOhq
15 ரன்கள் எடுக்கிறார். ஆனால் அவர் எப்பொழுது அந்த 15 ரன்களை பெறுகிறார் என்பது முக்கியம். 8 வயது குழந்தை அழுகிறது. உடனே அவர் பந்தில் அவரது கையொப்பம் இட்டு அந்த குழந்தையிடம் விட்டெறிகிறார். அந்த குழந்தை அந்தப் பந்தை பார்த்து மகிழ்கிறது. அந்த குழந்தையின் வாழ்வில் அந்த தருணம் மறக்க முடியாததாக இருக்கும்.
ஜோதிகா அவரை சந்திக்க வேண்டும் என்றபோது, அவர் நேரம் ஒதுக்கி பார்த்தார். 24 படத்தில் அவருடன் செல்ஃபி எடுப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அதற்காக அவர் அனுமதி அளித்தார். அதற்கு முன் அப்படி நடந்தது கிடையாது.அந்த விடியோ அளிப்பதற்கு உடனடியாக சம்மதித்தார் என்றார்.