பிக்பாஸ் வீட்டில் தொடங்கிய பிரச்சினை! (வீடியோ)

பிக்பாஸ் வீட்டில் தொடங்கிய பிரச்சினை! (வீடியோ)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தனித்தனி குழுவாக இயங்குவதாக பவானி ரெட்டி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரம் என்பதால் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யாரும் எவிக்சன் மூலம் வெளியேற்றப்படவில்லை. ஆனால் எதிர்பாராத விதமாக நமிதா வெளியேறினார்.

பிக்பாஸ் அவருக்கு ரெட் வழங்கியது என்றும், நமிதாவுக்கு கரோனா என்றும் பல தகவல்கள் உலா வந்தன. ஆனால் நமிதா உடல் நலக் குறைவு காரணமாகவே வெளியேறியதாக அவரது தோழி தெரிவித்து, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த நிலையில் அடுத்த வாரம் எவிக்சன் இருக்கும் என்பதால் போட்டியாளர்கள் இன்று நாமினேசன் செய்யத் துவங்கினர். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து, நாதியா, நிரூப், இமான் அண்ணாச்சி, இசைவானி, பிரியங்கா, அபினெய், அபிஷேக், அக்சரா ஆகியோர் நாமினேஷனில் இடம்பெற்றனர்.

இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரமோவில், இசைவாணியிடம் பேசும் பவானி, இங்கு குருப்பிஸம் இருக்கிறது. நான் போய் பேசும்போது, என்னை பார்த்தவுடன் தவிர்க்கும் விதமாக வேறு விஷயங்களை பேசுகிறார்கள். இங்கே தனித்தனி குழுவாக இருக்கிறார்கள் என்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES