தளபதி 66: விஜய்யுடன் 3வது முறையாக ஜோடி சேரும் முன்னணி நடிகை?

தளபதி 66: விஜய்யுடன் 3வது முறையாக ஜோடி சேரும் முன்னணி நடிகை?

தளபதி விஜய்யின் 65வது திரைப்படமான ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் தளபதி விஜய்யின் 66 வது திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில், பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் உருவாகும் ’தளபதி 66’ திரைப்படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது

தளபதி 66 திரைப்படம் நேரடி தெலுங்கு படமாகவும் தமிழ் படமாகவும் உருவாக இருப்பதால் இரு மொழிகளிலும் பிரபலமாக உள்ள ஒரு நடிகையை நாயகியாக நடிக்க வைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் ’தளபதி 66’ படத்தில் நாயகியாக கீர்த்திசுரேஷ் ஒப்பந்தமாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தளபதி விஜய் நடித்த ’பைரவா’ மற்றும் ’சர்கார்’ ஆகிய திரைப்படங்களில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள நிலையில் இந்த படத்தில் மூன்றாவது முறையாக ஜோடி சேர்வாரா? என்பதைப் ஒரு திறந்து பார்ப்போம்.

LATEST News

Trending News

HOT GALLERIES