கவினின் 'லிப்ட்' படத்தை அடுத்து ஹாட்ஸ்டாரில் வெளியாகும் பிக்பாஸ் பிரபலத்தின் படம்!

கவினின் 'லிப்ட்' படத்தை அடுத்து ஹாட்ஸ்டாரில் வெளியாகும் பிக்பாஸ் பிரபலத்தின் படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான கவினின் நடித்த ‘லிப்ட்’ திரைப்படம் சமீபத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியானது என்பதும் இந்தப் படம் மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் ‘லிப்ட்’ படத்தை அடுத்து மேலும் ஒரு பிக்பாஸ் பிரபலத்தின் திரைப்படத்தை வரும் 22ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக ஹாட்ஸ்டார் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண் என்பதும் இவரது நடிப்பில் உருவான ’ஓமண பெண்ணே’ என்ற படம் வரும் 22ஆம் தேதி வெளியிடப் போவதாகவும் ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள இந்த படத்தை கார்த்திக் சுந்தர் என்பவர் இயக்கியுள்ளார்.

 



கடந்த 2016ஆம் ஆண்டு தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான ’பெல்லி சூப்புளு’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படம் தான் இந்த படம் என்பது தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தமிழிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது திரையரங்குகளில் திறக்கப்பட்டு ஒரு சில திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீசாகி கொண்டிருக்கும் நிலையில் ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ’ஓமண பெண்ணே’ திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES