இரண்டு பிரபலங்கள் இணையும் படத்தின் டைட்டில் 'கோல்மால்'

இரண்டு பிரபலங்கள் இணையும் படத்தின் டைட்டில் 'கோல்மால்'

தமிழ் திரையுலகில் இரண்டு பிரபல நடிகர்கள் இணைந்து நடிக்கும் திரைப்படத்திற்கு ‘கோல்மால்’என்ற டைட்டில் வைக்கப்பட்டு, டைட்டில் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

தமிழ் திரை உலகில் இளைய தலைமுறை நடிகர்களான ஜீவா மற்றும் மிர்ச்சி சிவா ஆகிய இருவரும் இணைந்த ஒரு திரைப்படம் உருவாகவுள்ளது. இந்த திரைப்படத்தின் டைட்டில்லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி உள்ளது என்பதும் இந்த படத்திற்கு ‘கோல்மால்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜீவா, மிர்ச்சி சிவா ஆகிய இருவரும் காமெடியில் கலக்குவார்கள் என்பதால் இந்த படம் ஒரு காமெடி விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நாயகிகளாக பயல்ராஜ்புத், தன்யா ஹோப் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்குமரன் இயக்கத்தில் ஜாக்குவார் ஸ்டூடியோ நிறுவனத்தின் பி வினோத் ஜெயின் என்பவரின் தயாரிப்பில் உருவாக உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News