ஃபேண்டஸி திரைப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி: இயக்குனர் யார் தெரியுமா?

ஃபேண்டஸி திரைப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி: இயக்குனர் யார் தெரியுமா?

தமிழ் திரை உலகின் நடிகர், இசையமைப்பாளர் மற்றும் இயக்குனரான ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ’சிவகுமாரின் சபதம்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவரது அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் அடுத்த திரைப்படத்தை ஏஆர்கே சரவணன் என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ’மரகதநாணயம்’ என்ற படத்தை இயக்கி உள்ளார் என்பதும் அந்தத் திரைப்படம் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் புதிய படத்தை இயக்க ஏஆர்கே சரவணன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும் பெயரிடப்படாத இந்தப் படம் ஃபேண்டஸி திரைப்படமாக உருவாக உள்ளதாகவும் இந்த படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஏற்கனவே ஹிப் ஹாப் தமிழா ஆதி ’அன்பறிவு’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES