சீரியலில் வெளியேறிய நடிகை ஷீலா நடித்துள்ள புதிய படம்- யாருடைய படம் தெரியுமா?
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஒரு கதாபாத்திரம் முடித்து வைக்கப்பட்டது. அது யாரும் இல்லை அண்ணன்-தம்பிகளுக்கு அம்மாவாக நடித்த லட்சுமி அம்மாள் கதாபாத்திரம் தான்.
அவர் இறந்தது போல் காட்டியது மக்கள் அனைவருக்கும் பெரிய சோகத்தை கொடுத்தது. சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை ஷீலா விஜய் தொலைக்காட்சியிலேயே புதிய சீரியலில் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இப்போது அவரைப்பற்றி இன்னொரு தகவல் என்னவென்றால் இவர் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் சகோதரர் சந்திரஹாசன் அவர்களுடன் ஜோடி சேர்ந்து அப்பத்தாவ ஆட்டையைப் போட்டுட்டாங்க என்ற படத்தில் நடித்துள்ளாராம்.
படத்தின் டிரைலர் வெளியாகியுள்ள நிலையில் படம் வரும் அக்டோபர் 8ம் தேதி வெளியாகிறதாம்.