பிக்பாஸ் 5வது சீசனில் விஜய்யின் மாஸ்டர் பட நடிகரா?- யாரு தெரியுமா?

பிக்பாஸ் 5வது சீசனில் விஜய்யின் மாஸ்டர் பட நடிகரா?- யாரு தெரியுமா?

தமிழ் சினிமாவில் மாஸ்டர் செஃப், சர்வைவர் நிகழ்ச்சியை தொடர்ந்து படு பிரம்மாண்டமாக ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சி கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் 5து சீசன் தான்.

நிகழ்ச்சிக்கான அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டது, வரும் அக்டோபர் 3ம் தேதி நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கவுள்ளது, அந்த நாளுக்காக ரசிகர்கள் அனைவரும் வெயிட்டிங்.

ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் 5து சீசனில் இந்த பிரபலம் வரப்போகிறார், அவர் வருகிறார் என செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன, ஆனால் யார் நிஜத்தில் வருகிறார்கள் என்பது நிகழ்ச்சி ஆரம்பித்தாலே தெரியும்.

தற்போது என்ன தகவல் என்றால் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்துள்ள சிபி சந்திரன் பிக்பாஸ் 5வது சீசனில் கலந்துகொள்ள போகிறார் என கூறப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES