மாதவன் நடித்த 'ராக்கெட்டரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு!
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான மாதவன் நடித்து, தயாரித்து, இயக்கிய ‘ராக்கெட்டரி’ என்ற திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘ராக்கெட்டரி’ என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கடந்த சில மாதங்களாக போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாதவன் ஜோடியாக சிம்ரன் நடித்த இந்த திரைப்படத்திற்கு சாம் சி.எஸ் இசை அமைத்து உள்ளார்.