பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் கவர்ச்சி நடிகை?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் கவர்ச்சி நடிகை?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விஜய் டிவியில் வரும் அக்டோபர் 3-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்களைப் பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி தமிழ் திரையுலகின் கவர்ச்சி நடிகை ஒருவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கனி மற்றும் சுனிதா, ஷகிலாவின் மகள் மிளா, யாஷிகாவின் நண்பர் நிரூபன், விஜய் டிவி தொகுப்பாளினிகள் ஜாக்லின் மற்றும் பிரியங்கா, திருநங்கை நமீதா, தொழிலதிபர் ரேணுகா ப்ரவின், மலேசியாவை சேர்ந்த நதியாசிங் உள்பட ஒரு சிலர் கலந்துகொள்ள இருப்பதாக வெளிவந்த செய்தியைப் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகின் கவர்ச்சி நடிகை ஷாலு ஷம்மு கலந்து கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது. இவர் சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘மிஸ்டர் லோக்கல்’ மற்றும் இரண்டாம் குத்து உள்பட ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.


LATEST News

Trending News

HOT GALLERIES