மீண்டும் சன் டிவி சீரியலில் லிவிங்ஸ்டனின் மகள், வெளியான புதிய தகவல்..
பிரபல நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் தான் ஜோவிதா, இவர் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக தொடரில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வந்தார்.
பின்னர் திடீரென ஜோவிதா பூவே உனக்காக தொடரில் இருந்து விலகியதாக அறிவித்தார். அவரை தொடர்ந்து தொடரின் நாயகனும் அந்த தொடரில் இருந்து விலகினார்.
இந்நிலையில் தற்போது ஜோவிதா மீண்டும் சன் டிவி புதிய சீரியலின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார். ஆம் கன்னட சீரியலின் ரீமேக்காக உருவாகும் தொடரில் ஜோவிதா நடிக்கவுள்ளார்.
மேலும் அந்த புதிய தொடரில் கார்த்திக் வாசு மற்றும் நடிகை அம்பிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.