நாளை வெளியாகிறது 'மணி ஹெய்ஸ்ட் 5: இன்று டுவிட்டர் செய்தது என்ன தெரியுமா?
உலகம் முழுவதும் சினிமா ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் ‘மணி ஹெய்ஸ்ட் 5’ வெப்தொடரின் ஐந்தாவது பாகம் நாளை வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. இதற்காக கோடிக்கணக்கான ரசிகர்கள் மிகப்பெரிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ‘மணி ஹெய்ஸ்ட் 5’ நாளை வெளியாக உள்ள நிலையில் இன்று டுவிட்டரில் ‘மணி ஹெய்ஸ்ட் 5’ குறித்த எமோஜி வெளியாகியுள்ளது. இந்த எமோஜி ‘மணி ஹெய்ஸ்ட்’ கதையில் வங்கியில் கொள்ளை அடிக்கும் குழுவினர்கள் பயன்படுத்தும் முகமூடி வடிவில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த காலா, விஜய் நடித்த மெர்சல், சூர்யா நடித்த என்ஜிகே, பிரபாஸ் நடித்த சாஹோ, சமந்தா நடித்த தி ஃபேமிலிமேன் 2’ உள்பட பல இந்திய திரைபடங்கள் ரிலீஸாக்கும்போது டுவிட்டரில் எமோஜி வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது நாளை வெளியாகவிருக்கும் ‘மணி ஹெய்ஸ்ட் 5’ வெப்தொடருக்கும் எமோஜி வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.