டுவிட்டரில் ட்ரெண்டாகும் ஷிவாங்கியின் மாஸ் லுக் புகைப்படம்....!

டுவிட்டரில் ட்ரெண்டாகும் ஷிவாங்கியின் மாஸ் லுக் புகைப்படம்....!

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஷிவாங்கி. தன்னுடைய மெல்லிய குரலால் அனைவரையும் வசப்படுத்தும் திறமை கொண்டவர். இதைத்தொடர்ந்து குக் வித் கோமாளி -1 மற்றும் 2-ல் கலந்து கொண்டு தமிழ்நாட்டையே கலக்கினார். அவருடைய இயல்பான, குழந்தைத்தனமான செயல்பாடுகள் மக்களுக்கு பிடித்திருந்தது. இதன் காரணமாக இந்நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமாக, ஷிவாங்கிக்கு சினிமா வாய்ப்புகள் வந்து குவியத் துவங்கியது.

தற்போது நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் படத்தில், முக்கிய கேரக்டரில் ஷிவாங்கி நடித்து வருகிறார். இதுமட்டுமில்லாமல் மேலும் ஒருசில படங்களிலும் கமிட்டாகி உள்ளார். சிங்கர் -ஆன ஷிவாங்கி பாடிய "அஸ்குமாரோ " ஆல்பம் பாடல் யுடியூப் தளத்தில் பல மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெற்றுள்ளது. தற்போது அஸ்வின் நடித்துள்ள "அடிபொலி" என்ற ஆல்பம் பாடல் ஒன்று வெளியாகி இருந்தது. இந்த பாடலையும் இவர் தான் பாடியிருப்பார்.

இன்ஸ்டாகிராமில் 3.9 மில்லியன் பாலோயர்ஸ்-ஐ பெற்றுள்ள ஷிவாங்கி, யுடியூப் தளத்திலும் 1.61 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ளார். சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் அண்மையில் "காவேரியில்" எடுத்து புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா-வில் பதிவிட்டுள்ளார். இந்த மாடர்ன் லுக் புகைப்படம் தான் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டா-வில் ட்ரெண்டாகி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES