டிரெண்ட் ஆகும் ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

டிரெண்ட் ஆகும் ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவருமான ரம்யா பாண்டியன் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக உள்ளவர் என்பது தெரிந்ததே. அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் பதிவு செய்யும் பதிவுகள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் தெரிந்ததே.

 

ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்கள், யோகா செய்யும் வீடியோக்கள் உள்ளிட்ட பல பதிவுகளை செய்து வருவார் என்பதும் அவரது ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ், கமெண்ட்ஸ் குவியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மஞ்சள் உடை அணிந்த கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் ’ராரா’ என்ற திரைப்படத்தில் ரம்யா பாண்டியன் நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் அடுத்த மாதம் அமேசான் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

LATEST News

Trending News

HOT GALLERIES