சூரரை போற்று நாயகிக்கு அடித்த சூப்பர் அதிர்ஷ்டம்!
சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கிய ’சூரரைப்போற்று’ திரைப்படத்தில் நாயகியாக நடித்த அபர்ணா பாலமுரளி பிரபல நடிகருடன் நடிக்கும் சூப்பர் வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான கார்த்தி தற்போது ’பொன்னியின் செல்வன்’ மற்றும் ’சர்தார்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் அடுத்ததாக இயக்குனர் முத்தையா இயக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே முத்தையா இயக்கிய ’கொம்பன்’ திரைப்படத்தில் நடித்திருந்த கார்த்தி மீண்டும் அவருடன் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு நாட்களில் வெளிவரும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இரண்டு முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ள அபர்ணாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.