'விக்ரம்' படத்தின் புதிய ஸ்டில்லை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்!

'விக்ரம்' படத்தின் புதிய ஸ்டில்லை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி உள்பட பலர் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் நாயகியாக ஆண்ட்ரியா நடிக்க இருப்பதாக கூறப்பட்டாலும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.

இந்த நிலையில் ’விக்ரம்’ படத்தின் போஸ்டர்களை அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வரும் லோகேஷ் கனகராஜ், சற்றுமுன்னர் கமல்ஹாசன் திரையுலகில் நுழைந்து 62 ஆண்டுகள் ஆனதை அடுத்து புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

’விக்ரம்’ படத்தின் இந்த புதிய போஸ்டரில் கமல்ஹாசன் ரத்தக்கரையுடைய வாள் ஒன்றை தன் தோளில் சுமந்து இருப்பதுபோன்று அட்டகாசமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

LATEST News

Trending News