கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தின் நாயகி இவரா? வைரல் புகைப்படம்!

கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தின் நாயகி இவரா? வைரல் புகைப்படம்!

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்பட ஒரு சில பிரபலங்கள் இணைந்து உள்ள நிலையில் இந்த படத்தின் நாயகி யார் என்பதை படக்குழுவினர் சஸ்பென்ஸாக வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபல நடிகை ஆண்ட்ரியா சற்றுமுன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை பதிவு செய்து அதில் ‘Code Red' என்று குறிப்பிட்டு உள்ளார். ‘விக்ரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலும் இதே வார்த்தைகள் குறிப்பிடப்பட்டு இருப்பதால் அவர் ‘விக்ரம்’ படத்தில் நாயகியாக இணைகிறாரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். மேலும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கமல்ஹாசனுடன் விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, உத்தமவில்லன் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் ஆண்ட்ரியா, ‘விக்ரம்’ படத்திலும் நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘விக்ரம்’ திரைப்படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News