‘நவரசா’ பாணியில் ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் மேலும் ஒரு ஆந்தாலஜி படம்

‘நவரசா’ பாணியில் ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் மேலும் ஒரு ஆந்தாலஜி படம்

நவரசங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட நவரசா ஆந்தாலஜி படம் கடந்த ஆகஸ்ட் 6-ந் தேதி நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட்டது.

திரையுலகில் தற்போது ஆந்தாலஜி என்று அழைக்கப்படும் ஒரு சில குறும்படங்களின் குவியல் பிரபலமாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஓடிடி-யில் வெளியான நவரசா என்கிற ஆந்தாலஜி படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 

இந்நிலையில், சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கசடதபற’ என்கிற ஆந்தாலஜி படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படமும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

கசடதபற படத்தின் போஸ்டர்

இப்படத்தில் ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி  சங்கர், ரெஜினா, சாந்தனு, பிரேம்ஜி, விஜயலட்சுமி, வெங்கட் பிரபு உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இப்படத்திற்கு ஜிப்ரான், சாம் சி.எஸ்., சந்தோஷ் நாராயணன், பிரேம்ஜி, யுவன் சங்கர் ராஜா, ஷான் ரோல்டன் ஆகிய ஆறு இசையமைப்பாளர்கள் இசையமைத்து உள்ளனர். 

LATEST News

Trending News

HOT GALLERIES