பகத்பாசில் பிறந்தநாளுக்கு 'விக்ரம்' இயக்குனர் கொடுத்த சர்ப்ரைஸ்!

பகத்பாசில் பிறந்தநாளுக்கு 'விக்ரம்' இயக்குனர் கொடுத்த சர்ப்ரைஸ்!

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் ‘விக்ரம்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் பகத் பாசில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளிவந்தது என்பது தெரிந்ததே. மேலும் அவர் சமீபத்தில் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று பகத் பாசிலின் பிறந்தநாளை அடுத்து ‘விக்ரம்’ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளார். ‘விக்ரம்’ படத்தில் பகத் பாசில் கேரக்டரின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ள லோகேஷ் கனகராஜ் அவருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதி வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அதேபோல் இந்த படத்தில் பகத் பாசில் ஒரு விஞ்ஞானியாக நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், லோகேஷ் கனகராஜ், அனிருத் என திரையுலக பிரபலங்கள் ஒரே படத்தில் இணைந்து உள்ளதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES