படு ஸ்லிம் ஆகிவிட்ட நடிகை குஷ்பு… திடீர் மாற்றத்திற்கு இதுதான் காரணமா?

படு ஸ்லிம் ஆகிவிட்ட நடிகை குஷ்பு… திடீர் மாற்றத்திற்கு இதுதான் காரணமா?

“தர்பார்“ திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் சிறுத்தை சிவா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் “அண்ணாத்த” திரைப்படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் நடிகை குஷ்புவும் இணைந்துள்ளார் என்பது நமக்கு தெரிந்ததே.

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கும் நடிகை குஷ்பு தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் படு ஸ்லிம்மான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பிரவுன் நிறத்தில் சேலை அணிந்து இருக்கும் நடிகை குஷ்பு 90களில் முன்னணி நடிகையாக இருந்தபோது எப்படி இருந்தாரோ அப்படியே காட்சியளிக்கிறார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் திடீர் மாற்றத்திற்கு “அண்ணாத்த” திரைப்படம்தான் காரணமா? என ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் நடிகை குஷ்பு “ஜீ“ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபல சீரியலான “கோகுலத்தில் சீதை” எனும் சீரியலில் இணைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜுலை 28 ஆம் தேதி முதல் இந்த சீரியலில் இணைந்துவிட்ட நடிகை குஷ்பு மருத்துவர் கேரக்டரில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் 15 கிலோ எடையை குறைத்து படு ஸ்லிம் ஆகிவிட்ட நடிகை குஷ்புவின் இன்ஸ்டா புகைப்படத்திற்கு பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் பிரபலகங்கள் சிலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES