செந்தூரப் பூவே சீரியலில் இருந்து வெளியேறினாரா நடிகை தர்ஷா குப்தா- வெளிவந்த தகவல்
விஜய் தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று செந்தூரப்பூவே. இந்த சீரியலில் படங்களில் நடித்து கலக்கிய ரஞ்சித் நாயகனாக நடிக்கிறார்.
குடும்ப பாங்கான கதைக்களத்தில் ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் வில்லி வேடத்தில் நடித்து வருகிறார் குக் வித் கோமாளி 2 புகழ் தர்ஷா. இதில் அவருக்கு மிகவும் முக்கியமான வேடம் தான்.
ஆனால் திடீரென இந்த சீரியலில் இருந்து தர்ஷா குப்தா வெளியேறியிருப்பதாக கூறப்படுகிறது.
அவருக்கு பதிலாக புதிய நாயகி நடிக்க ஆரம்பித்துவிட்டாராம். ஆனால் அவர் யார், என்ன பெயர் என்பது எல்லாம் தெரியவில்லை.
இதோ அவரது புகைப்படம்,