வலிமை படம் குறித்து அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி !

வலிமை படம் குறித்து அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி !

தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம், இந்தியளவில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீண்ட நாள் காத்திருப்பிற்கு பின் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் செம வைரலானது.

மேலும் வலிமை படத்தின் பர்ஸ்ட் சிங்கள் சமீபத்தில் எந்த ஒரு முன் அறிவிப்புமின்றி வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் வலிமை திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுருந்த நிலையில், அதில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆம், வலிமை படத்தின் ரிலீஸை தள்ளி வைத்து அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாக மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.  

LATEST News

Trending News

HOT GALLERIES