மனைவிக்கு கொடுமை...பெண்களுடன் கள்ளத்தொடர்பு....! பிரபல பாடகர் மீது பாய்ந்த வழக்கு...!

மனைவிக்கு கொடுமை...பெண்களுடன் கள்ளத்தொடர்பு....! பிரபல பாடகர் மீது பாய்ந்த வழக்கு...!

பிரபல பாடகரான யோ யோ ஹானி சிங் மீது அவரது மனைவி போலீசாரிடத்தில் புகாரளித்துள்ளார்.

பஞ்சாபியை தாய் மொழியாகக்கொண்டவர் தான் பிரபல பாலிவுட் ராப் சிங்கர் ஹானி சிங். இவர் பஞ்சாபி, இந்தி உள்ளிட்ட மொழிகளில் அதிக பாடல்களையும், தமிழில் ஒருசில பாடல்களையும் பாடியுள்ளார். இவர் ஒருசில படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். இந்த நிலையில் மனைவி ஷாலினி தல்வார் இவர் மீது, டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

கடந்த 2011-இல் இருந்து, திருமணத்திற்குப்பிறகு ஹானி சிங் தன்னை உடல், மனது மற்றும் உணர்ச்சி ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் பிற பெண்களுடன் சட்ட விரோதமான முறையில் தொடர்பு வைத்துள்ளதாகவும், அதற்காக தன்னை கடுமையாக தாக்கியதாகவும், போதை பழக்கத்திற்கு அடிமையாகி பஞ்சாபி நடிகையுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாகவும் புகாரில் கூறியுள்ளார். மேலும் டெல்லியில் வசதியுள்ள வீட்டிற்கு மாதம் தோறும், ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும் என்றும், இழப்பீடாக ரூ.20 கோடி தர வேண்டும் என்றும் நீதிமன்றத்திடம் முறையிட்டுள்ளார்.

இதைதொடர்ந்து நீதிமன்றம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி, இதுகுறித்து வரும் ஆகஸ்ட்-28-- ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் அவகாசம் கொடுத்துள்ளது. ஆனால் ஹானி சிங் சார்பிலிருந்து, இன்னும் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES