கர்ப்பமாக இருக்கும் விஜய் டிவி சீரியல் நடிகரின் மனைவி - குவியும் வாழ்த்துக்கள்

கர்ப்பமாக இருக்கும் விஜய் டிவி சீரியல் நடிகரின் மனைவி - குவியும் வாழ்த்துக்கள்

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகண்ட சீரியல்களில் ஒன்று சுந்தரி நீயும் சுந்தரன் நானும்.

இந்த சீரியல் மூலம் சின்னத்திரையில், கதாநாயகனாக அறிமுகமானவர் வினோத் பாபு. இவர் இதற்கு முன் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

மேலும் தற்போது விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள ' தென்றல் வந்து என்னை தொடும்' சீரியலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் வினோத் பாபு விரைவில் அப்பாவாக இருக்கிறார். ஆம், நடிகர் வினோத் பாபுவின் மனைவி கர்ப்பமாக இருக்கிறார்.

இதனை, நடிகர் வினோத் பாபு, தனது மனைவியுடன் இணைந்து புகைப்படத்துடன் அறிவித்துள்ளார்.

தற்போது பலரும், இந்த தம்பதிக்கு தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர்.  

LATEST News

Trending News

HOT GALLERIES