குக் வித் கோமாளி பிரபலம் புகழ் எடுத்த அதிர்ச்சி முடிவு- ரசிகர்கள் கொஞ்சம் ஷாக்

குக் வித் கோமாளி பிரபலம் புகழ் எடுத்த அதிர்ச்சி முடிவு- ரசிகர்கள் கொஞ்சம் ஷாக்

குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சி மூலம் பெரிய அளவில் பிரபலமானவர் புகழ். இந்த நிகழ்ச்சி பல கலைஞர்களுக்கு வாழ்க்கை கொடுத்துள்ளது என்றே கூறலாம். 

சினிமாவில் தங்களது திறமையை காட்டி வெற்றிபெற ஒரு பாதையாக இந்நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. 2வது சீசன் முடிந்ததில் இருந்து புகழ், ஷிவாங்கி, அஷ்வின் என பலர் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்கள்.

அதிலும் புகழ் அடுத்தடுத்து ஏகப்பட்ட படங்கள் கமிட்டாகிறார். ஒருபக்கம் இது புகழ் ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தாலும் ஒரு அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது.

அதாவது படங்களில் பிஸியாக இருப்பதால் புகழ் விஜய் டிவி நிகழ்ச்சிக்கு வருவதை நிறுத்தப்போகிறாராம். இனிமேல் தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சிக்கும் அவர் வரப்போவதில்லையாம்.

இது அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சி செய்தியாக அமைந்துள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES