"நான் கர்ப்பமாக உள்ளேன்".....! அழகான வில்லி நடிகை பதிவிட்ட புகைப்படம்....!

"நான் கர்ப்பமாக உள்ளேன்".....! அழகான வில்லி நடிகை பதிவிட்ட புகைப்படம்....!

வில்லியாக நடித்து, வெண்பாவாக மக்கள் மனதில் பதிந்த நடிகை ஃபரீனா கர்ப்பமாக உள்ளார்.

பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து, மிகவும் பிரபலமானவர் தான் நடிகை ஃபரீனா. இவர் ஏற்றுள்ள வில்லி கதாபாத்திரம்(வெண்பா) ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இவர் ஏற்கனவே பல ஷோக்களை தொகுத்து வழங்கியுள்ளார். ஆனால் இந்த சீரியல் மூலம் தான் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் பரீனாவுக்கு உருவானது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பரீனா, அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருவார்.

இந்நிலையில் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு "எங்களின் 4 வருடக்கனவுகள் நிஜமாகப்போகிறது. இன்னும் 3 மாதம் தான், அதற்கு உங்களுடைய ஆசிர்வாதம் தேவை" என பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES