விஜய் டிவி டிடியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரல்!

விஜய் டிவி டிடியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரல்!

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி என்பதும் கடந்த 1999ஆம் ஆண்டு ’உங்கள் தீர்ப்பு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமான டிடி அதன்பின் சன் டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகளிலும் அதன் பின்னர் விஜய் டிவியில் பல வருடங்களாக தொகுப்பாளினியாக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

விஜய் டிவியில் ஒளிபரப்பான காபி வித் டிடி, ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சிகள் உள்பட இவரது பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் டிடி, ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வரும் டிடியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் டிடிக்கு 36 வயது என்றால் நம்ப முடிவதில்லை என்றும் இன்னும் டீன் ஏஜ் இளம் பெண் போல் தோற்றம் அளிக்கிறார் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES