அட என்னது குக்வித் கோமாளி 3ல் ரக்ஷனுக்கு ஜோடியாக இந்த விஜே வரப்போகிறாரா?

அட என்னது குக்வித் கோமாளி 3ல் ரக்ஷனுக்கு ஜோடியாக இந்த விஜே வரப்போகிறாரா?

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக்வித் கோமாளி நிகழ்ச்சி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்க வைத்துள்ளது.

CWC முதல் சீசனை விட இரண்டாவது சீசன் மாபெரும் வெற்றியடைந்தது. CWC ஹிட்டாக மாறியதற்கு காரணம் அதில் கலந்து கொண்ட கோமாளிகள் தான். புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை, தங்கதுரை, சக்தி, சரத், சுனிதா ஆகியோர் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தனர்.

கோமாளிகள் மட்டுமல்லாது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்களான ஷகீலா, அஸ்வின், கனி, மதுரை முத்து, பாபா மாஸ்டர், பவித்ரா, தர்ஷா ஆகியோருக்கும் இந்த நிகழ்ச்சி மூலம் வேறலெவல் ரெஸ்பான்ஸ் கிடைத்தது.

 

இந்நிலையில், விரைவில் CWC சீசன்-3 ஆரம்பமாகப் போகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது. இதில் ரக்ஷனுடன் இணைந்து இன்னொரு நபரும் ஆங்கரிங் செய்யபோவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. அது வேறுயாருமில்லை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கோமாளியான வி.ஜே மணிமேகலை தான்.

இவர் கடந்த 2 சீசன்களாக கோமாளியாக வந்து மக்களை சிரிக்க வைத்திருப்பார். மேலும், குக்கு வித் கோமாளி சீசனிலுமே அதிகமாக மணிமேகலை நான் விஜேவா வரணும் என கூறிக்கொண்டே இருப்பார். தற்போது அந்த ஆசை நிறைவேற போகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.... 

LATEST News

Trending News

HOT GALLERIES