குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் பிக்பாஸ் பிரபலமா?- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்
சின்னத்திரையில் இதுவரை வந்த சமையல் நிகழ்ச்சிகளிலேயே மக்களின் பேராதரவோடு சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான்.
தமிழில் அமோக வெற்றிப்பெற்றதை தொடர்ந்து தற்போது கன்னடத்திலும் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது, அதில் வெங்கடேஷ் பட் ஒரு நடுவராக இருக்கிறார்.
இங்கே 3வது சீசனிற்கான பேச்சுகள் வந்துகொண்டே இருக்கின்றன, ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.
அண்மையில் நடிகையும், பிக்பாஸ் பிரபலமும் ஆன சனம் ஷெட்டியை ரசிகர்கள் ஒருவர் டுவிட்டரில் வாய்ப்பு கிடைத்தால் குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சிக்கு செல்வீர்களா என கேட்டுள்ளனர்.
Why not!🤔#AskSanam #CWC https://t.co/uOM73fY86F
— Sanam Shetty (@ungalsanam) July 15, 2021