Master Chef சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதிக்கு இவ்வளவு சம்பளமா?
கொரோனா நோய் தொற்று தமிழ்நாட்டில் எப்போது பரவ தொடங்கியதோ அப்போதோ எல்லா துறையும் டல் ஆகிவிட்டது.
அதிலும் சினிமாதுறை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, அன்றாடம் சம்பளத்திற்கு பணிபுரியும் தொழிலாளர்கள் எல்லாம் கடுமையாக கஷ்டப்பட்டார்கள்.
இப்போது தான் நோய் தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது. எனவே மெதுவாக படங்களின் வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. வெள்ளித்திரையை விட சின்னத்திரையில் தான் இப்போது ரசிகர்களை இழுக்கும் வண்ணம் நிறைய விஷயங்கள் நடந்து வருகிறது.
அதில் ஒன்று தான் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கும் Master Chef. இந்த சமையல் நிகழ்ச்சியின் புரொமோக்கள் எல்லாம் வெளியாகிவிட்டன, நிகழ்ச்சியும் விரைவில் தொடங்க உள்ளது.
இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி அதிக சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது ஒரு படத்திற்கு அவர் வாங்கும் சம்பளத்தை விட கோடி கணக்கில் இந்நிகழ்ச்சிக்காக பெறுவதாக கூறப்படுகிறது.