குக் வித் கோமாளியை தொடர்ந்து விஜய் டிவி-ல் ஒளிபரப்பாகவுள்ள காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சி!
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முக்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த ஒரு நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் அதிகம்.
மேலும் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்தது. இதில் கனி முதல் இடத்தை பிடித்து டைட்டிலை தட்டி சென்றார்.
இந்நிலையில் தற்போது விஜய் டிவி-ல் "பொங்குறோம் திங்குறோம்" என்ற புதிய சமையல் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நிகழ்ச்சியை ரோபோ ஷங்கர் தொகுத்து வழங்குகிறார். கிரேஸ் கருணாஸ், வினோத்குமார் நடுவர்களாகவும் அமுதவாணன், தங்கதுரை, நாஞ்சில் விஜயன் என பல சின்னத்திரை நட்சத்திரங்களும் போட்டியாளர்களாகவும் போட்டிபோட உள்ளனர்.
