ரோஜா சீரியலில் புதிதாக நடிக்கவரும் நடிகை - ரசிகர்களுக்கு காத்திருக்கும் சப்ரைஸ்

ரோஜா சீரியலில் புதிதாக நடிக்கவரும் நடிகை - ரசிகர்களுக்கு காத்திருக்கும் சப்ரைஸ்

சன் டிவி சீரியல்களில் இதுவரை கண்டிராத உச்சத்தை ரோஜா சீரியல் TRPயில் தொட்டது.

அதுமட்மின்றி தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் தற்போது முதலிடத்தில் ரோஜா உள்ளது.

சமீபத்தில் ரோஜா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஷாமிலி, பிரசவத்தின் காரணமாக சீரியலை விட்டு விலகியுள்ளார்.

இதனால் அவர் சிறப்பாக நடித்து வந்த ப்ரியா எனும் வில்லி கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார் என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் இந்த வில்லி கதாபாத்திரத்தில் சன் டிவி தொகுப்பாளினி அக்ஷயா நடிக்கவிருக்கிறார் என்று தெரியவந்துள்ளது.

அதுவும் ஜெய்லில் சிறைப்பட்டு இருக்கும் அணு தப்பிவிடுவதாகவும், அவருக்கு பதில் பொய்யான அணு இருப்பதாகவும் சமீபத்திய ப்ரோமோவில் காட்டியிருந்தார்.

இதனால் பொய்யான அணு கதாபாத்திரத்தில் தான் தொகுப்பாளினி அக்ஷயா நடிக்க வந்துள்ளார் என்றும் தெரிவிக்கின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES