விஜய்சேதுபதியுடன் பாடியதை நினைவு கூர்ந்த பிரபல விஜே! வீடியோ வைரல்

விஜய்சேதுபதியுடன் பாடியதை நினைவு கூர்ந்த பிரபல விஜே! வீடியோ வைரல்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் ஒரு திரைப்பட பாடலை பாடியயதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல விஜே நினைவு கூர்ந்துள்ளார். இது குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

இளம் நடிகர் கௌதம் கார்த்திக் நடித்த ’தேவராட்டம்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ’மதுரை பளபளக்குது’. இந்த பாடலை இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, விஜய் சேதுபதி ஆகியவர்களுடன் விஜய் டிவி பிரபல விஜே பிரியங்காவும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த பாடல் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் தற்போது இந்த பாடலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியங்கா பாடி நினைவு கூர்ந்துள்ளார். இது குறித்த வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்து, ‘இந்த பாடலை பாடியது யார் என்பதைக் கண்டுபிடியுங்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். ரசிகர்கள் மிகச்சரியாக இந்த பாடலை நீங்கள் தான் பாடினீர்கள் என்றும் தேவராட்டம் படத்தில் இந்த பாடல் இடம்பெற்றிருந்தது என்றும் கமெண்ட்ஸ்களில் பதிவு செய்து வருகின்றனர். பிரியங்காவின் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES