மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது விஜய் டிவியில் பாதியில் நிறுத்தப்பட்ட சூப்பர் சீரியல்- வீடியோவுடன் இதோ

மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது விஜய் டிவியில் பாதியில் நிறுத்தப்பட்ட சூப்பர் சீரியல்- வீடியோவுடன் இதோ

இரண்டாம் அலையின் கொரோனா தாக்கம் இந்தியர்களை பெரிய அளவில் சோதித்து விட்டது. இந்த இரண்டாம் அலை தாக்கத்தில் இருந்தே மக்கள் வெளியே வரவில்லை, அதற்குள் 3ம் அலை பற்றி பேச்சுகள் அடிபடுகிறது.

மக்களும் முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டு இருக்கிறது, அன்றாடம் தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்த இரண்டாம் அலை காரணமாக சீரியல் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது, என சில சீரியல்களின் பழைய எபிசோடுகள் ஒளிபரப்பாகி வந்தன, இப்போது மீண்டும் பழைய நிலைமைக்கு வந்துவிட்டது.

ஆனால் விஜய்யில் ஒளிபரப்பான மௌன ராகம் 2 சீரியல் படப்பிடிப்பு தொடங்குவதில் சிக்கலை சந்தித்து வந்தது, இதனால் இதன் ஒளிபரப்பு அப்படியே நிறுத்தப்பட்டது.

தற்போது எல்லா பிரச்சனைகளும் முடிந்து இந்த சீரியல் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாம். சீரியலில் தருண்-வருண் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்கள் வீடியோவாக தெரிவித்துள்ளனர்.

LATEST News

Trending News