'மானாட மயிலாட' கோகுல் மனைவியும் க்யூட் குழந்தைகளும்: வைரல் புகைப்படம்!
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் புகழ்பெற்ற பல கலைஞர்களின் ஒருவர் கோகுல் என்பதும் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ’மானாட மயிலாட’ என்ற நிகழ்ச்சியின் மூலம் இவர் ரசிகர்களை கவர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் நடன மட்டுமின்றி மிமிக்ரி கலைஞர் உள்பட பல் திறமை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி நயன்தாராவின் ‘ஐரா’ உள்பட ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு மற்றும் நாளைய இயக்குனர் போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ள இவர் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் இவர்தான் என்றும் கூறப்படுவதுண்டு

இந்த நிலையில் கோகுல் கடந்த 2015ஆம் ஆண்டு லோகேஷ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கோகுலின் மனைவி மற்றும் இரண்டு க்யூட் குழந்தைகளின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதையடுத்து இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.