விஜய்யை அடுத்து அஜித் படத்தில் நடிப்பதையும் உறுதி செய்த யோகிபாபு!

விஜய்யை அடுத்து அஜித் படத்தில் நடிப்பதையும் உறுதி செய்த யோகிபாபு!

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு சமீபத்தில் தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 65’ படத்தில் நடிப்பதை உறுதி செய்தார் என்ற செய்தியைப் பார்த்தோம். அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த போது ’தளபதி 65’ படத்தில் நடிப்பதை தெரிவித்திருந்தார். இதனை அடுத்து மெர்சல், சர்க்கார், பிகில் படங்களுக்கு அடுத்து நான்காவது முறையாக அவர் விஜய்யுடன் இணைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அஜீத் நடித்து வரும் ’வலிமை’ படத்தில் யோகி பாபு நடித்து வருவதாக தகவல்கள் வெளி வந்தாலும் அதனை படக்குழுவினர் உறுதி செய்யாமல் இருந்தனர். இந்த நிலையில் இந்த தகவலை தற்போது யோகிபாபு அதனை உறுதி செய்துள்ளார்

யோகிபாபுவின் டுவிட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் ’வலிமை’ படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா என்ற கேள்விக்கு ’ஆமாம்’ என்று யோகிபாபு பதிலளித்து உள்ளதை அடுத்து யோகி பாபு ’வலிமை’ படத்தில் நடிக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அஜீத் நடித்த வீரம், விஸ்வாசம், வேதாளம் ஆகிய படங்களில் யோகி பாபு நடித்த நிலையில் தற்போது மீண்டும் அவரது படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News