மீண்டும் வலுவான வில்லன் கதாபாத்திரத்தில் அருண் விஜய் - இயக்குனர் யார் தெரியுமா

மீண்டும் வலுவான வில்லன் கதாபாத்திரத்தில் அருண் விஜய் - இயக்குனர் யார் தெரியுமா

தமிழ் திரையுலகில் தற்போது தவிர்க்க முடியாத நட்சத்திரங்களில் ஒருவராக மாறியுள்ளார் நடிகர் அருண் விஜய்.

சில ஆண்டுகள் தமிழ் திரையுலகில் பின்தங்கி இருந்த நடிகர் அருண் விஜய், என்னை அறிந்தால் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

இந்நிலையில் லிங்குசாமி இயக்கும் புதிய படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடிக்கவிருப்பதாக தகவல் கூறப்டுகிறது.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாக உள்ள இப்படத்தில், தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளார்.

அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாக உள்ள இப்படத்தில், வலுவான வில்லன் கதாபாத்திரம் ஒன்றை உருவாக்கி உள்ளாராம் லிங்குசாமி.

ஏற்கனவே மாதவனிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது அருண் விஜய்யிடமும் பேசி வருகிறார்களாம்.

இவர்கள் இருவரில் யார் வில்லனாக நடிக்க சம்மதிப்பார்கள் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

LATEST News

Trending News

HOT GALLERIES