வெண்பா கதாபாத்திரம் பார்த்துவிட்டு பரீனாவின் கணவர் என்ன செய்வாராம் தெரியுமா?- அவரே சொன்ன தகவல்
பாரதி கண்ணம்மா சீரியல் மிகவும் தைரியமான பெண்களை பற்றியே சுற்றும் கதை.
வாழ்க்கையில் சாதித்த பெண்ணாக சௌந்தர்யா கதாபாத்திரம், சாதிக்க துடிக்கும் ஒரு சாதாரண பெண்ணாக கண்ணம்மாவின் கதாபாத்திரம் என அழகான கதை.
இதற்கு இடையில் இவர்களை கொடுமைப்படுத்த கதையை ஓட்ட தைரியமான, எந்த தவறையும் தைரியமாக செய்யும் ஒரு மோசமான வில்லி என கதை நகர்ந்து வருகிறது.
அண்மையில் இந்த சீரியலில் வெண்பா வேடத்தில் நடிக்கும் பரீனா இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர் வெண்பா வேடம் குறித்து உங்களது கணவரின் பார்வை என்ன என கேட்டுள்ளார்.
அதற்கு பரீனா, எனது கணவர் பாரதி கண்ணம்மாவில் வெண்பாவை பார்த்து சிரிப்பார் என கூறியுள்ளார்.