'மாநாடு' படத்தின் முக்கிய உரிமையை பெற்ற யுவன்: ஃபர்ஸ்ட் சிங்கிள் தேதி குறித்த தகவல்!

'மாநாடு' படத்தின் முக்கிய உரிமையை பெற்ற யுவன்: ஃபர்ஸ்ட் சிங்கிள் தேதி குறித்த தகவல்!

சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’மாநாடு’. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. லாக்டவுன் முடிந்தவுடன் மீதி படப்பிடிப்பை முடித்த உடன் படக்குழுவினர் ரிலீஸ் வேலைகளில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’மாநாடு’ படத்தின் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என சமீபத்தில் யுவன்சங்கர்ராஜா அறிவித்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி ’மாநாடு’ சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி மற்றும் நேரம் குறித்த தகவல் தகவலை வரும் புதன்கிழமை யுவன் சங்கர் ராஜா அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது

மேலும் ’மாநாடு’ படத்தின் ஆடியோ உரிமையை யுவன் சங்கர் ராஜாவின் ’யூஒன் ரெக்கார்டு என்ற நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்த படத்தின் உரிமையை அவரது நிறுவனமே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் ’மாநாடு’ படத்தில் பாரதிராஜா, எஸ்ஏ சந்திரசேகர் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களில் ஒன்று ’மாநாடு’ என்பதும் குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News