நயன்தாராவின் 'நெற்றிக்கண்' படத்தின் முக்கிய அப்டேட்: ரசிகர்கள் குஷி

நயன்தாராவின் 'நெற்றிக்கண்' படத்தின் முக்கிய அப்டேட்: ரசிகர்கள் குஷி

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’நெற்றிக்கண்’ திரைப்படத்தின் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என ஏற்கனவே இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அந்த பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

’நெற்றிக்கண்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘இதுவும் கடந்து போகும்’ என்ற பாடல் நாளை காலை 9 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த போஸ்டர் ஒன்றும் வெளியாகி உள்ளது என்பதும் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தை மிலிந்த் ராவ் என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ’அவள்’ உள்ளிட்ட ஒருசில படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விக்னேஷ் சிவனின் ‘ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில் உருவாகியுள்ளது. நாளை வெளியாகவுள்ள ‘இதுவும் கடந்து போகும் என்ற இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார் என்பதும் இந்த பாடல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News